அரசியல்
Now Reading
தனிக்கட்சி தொடங்குகிறார் தீபா!!
0

தனிக்கட்சி தொடங்குகிறார் தீபா!!

by Sub EditorJanuary 12, 2017 1:11 pm

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அவரது அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா, அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க.வில் ஒரு பிரிவை சேர்ந்தவர்களும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளும் தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு தினமும் கூடி வருகின்றனர். அப்போது அவர்கள் தீபா, பயப்படாமல் அரசியலுக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

தொண்டர்களின் எண்ணத்தை அறிந்து கொள்ள தீபா, தனது வீட்டு முன்பு பெரிய பெட்டி ஒன்றையும் வைத்துள்ளார். அதில் அவரது ஆதரவாளர்கள் தங்களது கருத்துக்களை எழுதி போட்டு வருகிறார்கள்.

காலையில் தீபாவின் கணவர் மாதவன் தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறார். மாலையில் தொண்டர்களை சந்திக்கும் தீபா, அவர்கள் முன்பு சிறிது நேரம் உரையாற்றுகிறார். இது கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று அரசியலில் குதிக்க தீபா முடிவு செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார். எம்.ஜி.ஆர். பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி முதல் எனது அரசியல் பயணம் தொடங்கும் என்று தீபா அறிவித்துள்ளார்.

அன்று காலையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டு தனது அரசியல பயணத்தை தீபா தொடங்குகிறார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response