மாவட்டம்
Now Reading
தண்ணீரை கொள்ளையடிக்கும் கும்பல்; துணைபோகும் ஆணையர்!!!
0

தண்ணீரை கொள்ளையடிக்கும் கும்பல்; துணைபோகும் ஆணையர்!!!

by Sub EditorDecember 31, 2016 2:31 pm

தமிழகத்திலுள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் அழகாகவும் பல்வேறு தரப்பினர் வந்து போகும் இடமாகவும் திகழ்வது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்.
இங்கு சமீபகாலமாக குடிநீர் பிரச்னை தலைதூக்கி இங்கு வசிக்கும் நகர மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவரும் இங்கு வந்து போகின்றனர். அதனால் எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் பகுதியாக இருக்கிறது. எனவே அவர்களுக்கான குடிநீர் தேவையும் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் குடிநீர் பிரச்னை பெரிதாகி கொண்டே போகிறது. பருவ மழையும் பொய்த்து போனது மக்களை மேலும் வாட்டி வதைக்கிறது.

குடிப்பதற்கு சிலநாட்கள் காத்திருந்தவர்கள், இப்போது பலநாட்கள் குடங்களுடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது. கொடைக்கானல் நகராட்சி மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் நீரை வைத்து இந்தப் பிரச்னையை சமாளித்து வருவதாக நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு விளக்கம் கூறுகிறது.

கொடைக்கானல் வாழ் மக்களுக்கு, சுற்றுலா பயணிக்களுக்கும் தண்ணீர் போதாத நிலையில், வறட்சியால் மக்கள் தவித்து வரும் நிலையில், இங்குள்ள விடுதி
களுக்கு மட்டும் தட்டுப்பாடின்றி தண்ணீர் எப்படி கிடைக்கின்றது? என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து விசாரணையில் இறங்கியபோது தண்ணீர் கொள்ளையடிக்கப்படுவது தெரியவந்தது.  இங்குள்ள நட்சத்திர ஏரியிலிருந்து ஒரு கும்பல் தண்ணீரை தினமும் லாரிகளில் திருடிச் சென்று விடுதி
களுக்கு சப்ளை செய்கிறது.

மின் மோட்டார் கொண்டு தனியார் தங்கும் விடுதிகளுக்கு ஒரு இரவில் மட்டும் 20க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் திருட்டு நடந்து வருகிறது.
விடுதியினர் இதை திருடுகிறார்களா? என்று விசாரித்தபோது, குடிக்க பொது மக்களுக்கு தண்ணீர் தர முடியாத கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சரவணனுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. திருட்டுதனமாக நட்சத்திர ஏரியில் தண்ணீர் திருடும் லாரி உரிமையாளர்களிடமும், தங்கும் விடுதி உரிமையாளர்களிடமும் இலட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு மறைமுக உத்தரவு கொடுத்துள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

மேலும் இப்படி திருட்டுதனமாக எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரிக்காமல் அப்படியே விடுதியினர் பயன்படுத்துகிறார்களாம். ஏனென்றால் லஞ்சம் கொடுத்த பணத்தை மிச்சப்படுத்த சுத்திகரிக்கும் செலவை குறைத்துவிடுகிறார்களாம். மேலும், நட்சத்திர ஏரியை சுற்றி இருக்கும் தங்கும் விடுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை இந்த ஏரியில் கலந்துவிடுகின்றனர் விடுதியினர்.
இதனால் ஏரிநீர் நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது.

இந்நீரை குடிநீராக பயன்படுத்தும் பொதுமக்களுக்கு மஞ்சள்காமாலை, வைரஸ் காய்ச்சல்கள் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விவகாரம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது.

கொடைக்கானல் ஆணையர் சரவணன் மீது மாவட்ட ஆட்சியர் வினய் துறை ரீதியான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் கொடைக்கானல் நகர மக்கள்.

– பழனி

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response