மாவட்டம்
Now Reading
தடை நீங்கியது….. குஷியில் குளிர்பான நிறுவனங்கள்
0

தடை நீங்கியது….. குஷியில் குளிர்பான நிறுவனங்கள்

by Sub EditorMarch 4, 2017 2:52 pm

தமிழகத்தில் அயல்நாட்டு குளர்பானங்களுக்கு இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தையடுத்து, தமிழக வணிகர்களும் அயல்நாட்டுக் குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று அறிவித்தார்கள்.

புதுச்சேரி வணிகர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை உறிஞ்சுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. நீராதாரம் குறைந்து அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

நிலைமை இப்படியிருக்க, தாமிரபரணி ஆற்றில் இருந்து தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியுள்ளது. நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான ஆலைக்கு நீர் எடுக்கத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 2 பொது நலன் மனுக்களையும், ஆலை நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கடந்த நவம்பரில் குளிர்பான ஆலைகள் தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டது . தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை மட்டுமே தாங்கள் பயன்படுத்துவதாக ஆலை நிர்வாகங்கள் கூறியதை ஏற்று பொது நலன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், தாமிரபரணி ஆற்றின் நீரை நம்பியுள்ள நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயமும், குடிநீர் தேவையும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

– எஸ்.சுபத்ரா

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response