விளையாட்டு
Now Reading
ட்விட்டரில் ‘தோனி ட்ராப்டு’ ஹேஷ்டேக்: சேவாக் கடும் கண்டனம்
0

ட்விட்டரில் ‘தோனி ட்ராப்டு’ ஹேஷ்டேக்: சேவாக் கடும் கண்டனம்

by editor sigappunadaApril 16, 2017 11:37 am

ட்விட்டரில் ‘தோனி ட்ராப்டு’ என்று ஹேஷ்டேக் உருவாக்கி தோனியை விமர்சனம் செய்பவர்களுக்கு முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பை இழந்த தோனி பேட்டிங்கிலும் சொதப்பி வருவதையடுத்து அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

மேலும் அவரை புண்படுத்தும் விதமாக தோனி ட்ராப்டு என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அது ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. இதில் நிறைய பேர் தோனிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கெல்லாம் அசராத தோனி ரசிகர்கள் ‘வீ ஸ்டேண்ட் பை தோனி’ என்று ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி அதில் ஆதரவுக் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தோனிக்கு எதிரான விமர்சனங்களுக்கு விரேந்திர சேவாக் தனது கடும் விமர்சனங்களை முன் வைத்தார், “டி20 கிரிக்கெட்டில் 6-வது இடத்தில் இறங்கி ஆடுவது கடினம். இன்னமும் கூட 5-6 இடங்களில் தோனி சிறப்பாக ஆடக்கூடியவர்தான். விரைவில் ஒரு பெரிய இன்னிங்ஸை அவர் ஆடுவார் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் நிறைய போட்டிகள் உள்ள நிலையில் அதற்குள் தோனியை விமர்சனம் செய்வது சரியாகாது.

இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் ஒருநாள் போட்டியில் சதம் எடுத்தார். சாம்பியன்ஸ் டிராபிக்கு தோனி இல்லாமல் செல்லலாம் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஐபிஎல் தொடரில் இப்படிப்பட்ட நிலை ஏற்படுவது இயல்புதான்.

தோனியைப் போன்ற அனுபவசாலிகளின் திறமையை எடைபோட ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தை அளவுகோலாக வைக்கக் கூடாது. இளம் வீரர்களின் தரத்தை நிர்ணயிப்பதற்கு வேண்டுமானால் ஐபிஎல் சரியாக இருக்கும்” என்றார் சேவாக்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response