சினிமா
Now Reading
டோராவை வெற்றிபெற வைக்க நயன் தாரா செய்யும் தந்திரம்
0

டோராவை வெற்றிபெற வைக்க நயன் தாரா செய்யும் தந்திரம்

by editor sigappunadaMarch 26, 2017 9:56 am

கதாநாயகியாக நடிப்பதைவிட கதையின் நாயகியாக நடிப்பதற்கே நடிகை நயன்தாரா சமீபகாலமாக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது.

தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் ‘டோரா’. மார்ச் 31ஆம் தேதி வெளிவரவிருக்கும் இந்தப் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இருப்பினும் படத்துக்கு ‘A’ சான்றிதழ் கிடைத்ததால் அதிருப்தியில் இருந்த படக்குழு, புதுமையான முறையில் படத்தை விளம்பரப்படுத்தினால்தான் படத்தை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும் என்பதை புரிந்துகொண்டு, புதிய விளம்பர யுக்தியை கையாண்டுள்ளது.

அமானுஷ்யமான ஒரு காரை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, படத்தில் இடம்பெறும் அந்த காரைப் போன்று டம்மியான கார்களை உருவாக்கி, சென்னையில் உள்ள சத்யம், எஸ்கேப், ஐனாக்ஸ், பிவிஆர், தேவி, லக்ஸ், சங்கம் உட்பட பல தியேட்டர்களில் காட்சிக்கு வைத்திருக்கின்றனர்.

அந்தக் கார் உடன் செல்ஃபி எடுத்து அனுப்பி வைத்தால், அவர்களில் இருந்து சிலர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட அதிர்ஷ்டசாலிகள் நயன்தாராவைச் சந்திக்கவும், அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response