விளையாட்டு
Now Reading
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: லியாண்டர் பயஸ், விஷ்ணுவர்தன் ஜோடி தோல்வி
0

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: லியாண்டர் பயஸ், விஷ்ணுவர்தன் ஜோடி தோல்வி

by editor sigappunadaFebruary 5, 2017 2:36 pm

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசியா-ஓசியானா பிரிவில்இந்திய அணி, நியூஸிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம்புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளில் நடைபெற்ற ஒற்றை யர்பிரிவு ஆட்டங்களில் இந்தி யாவின் யூகி பாம்ப்ரி, ராம் குமார் ராமநாதன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது.

இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இரட்டையர்பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைவென்ற இந்தியாவின் லியாண்டர் பயஸ், விஷ்ணுவர் தனுடன் இணைந்து களமிறங்கி னார்.

இந்த ஜோடி, நியூஸிலாந்தின் ஆர்டெம் ஷிடாக், மைக்கேல் வீனஸ்ஜோடியை எதிர்த்து விளையாடியது. முதல் செட்டை பயஸ் ஜோடி 6-3 என கைப்பற்றியது. 2-வது செட்டில் நியூஸிலாந்து ஜோடி ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்தியது.

பின்தங்கிய நிலையில் இருந்த போதும் பயஸ் ஜோடி கடுமையாக போராடியது. ஆனால் இந்த செட்டை நியூஸிலாந்து 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது. 3-வது செட்டில் கடும் போட்டி நிலவியது. இரு அணிகளும் தலா 6 புள்ளிகளை எடுத்ததால் டை பிரேக்கருக்கு சென்றது. இதில் 8-6 என நியூஸிலாந்து ஜோடி 3-வது செட்டை கைப்பற்றியது.

பரபரப்பாக நடைபெற்ற 4-வது செட்டில் ஆரம்பத்திலேயே ஆதிக் கம் செலுத்திய நியூஸிலாந்து ஜோடி இந்த செட்டையும் 6-3 எனதன்வசப்படுத்தியது. முடிவில் ஆர்டெம் ஷிடாக், மைக்கேல் வீனஸ் ஜோடி 3-6, 6-3, 7-6(8-6), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

ஒற்றையர் பிரிவில் இரு ஆட்டங் களிலும் வெற்றி பெற்றதால் இந்திய 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசி நாளான இன்று ஒற்றையர் பிரிவில்இரு ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஒரு ஆட்டத்தில் ராம்குமார் ராமநாதன், பின் டீயர்னே உடனும் மற்றொரு ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி, ஜோஸ் சத்தமுடனும் மோதுகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response