விளையாட்டு
Now Reading
‘டுவென்டி-20’: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி!
0

‘டுவென்டி-20’: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி!

by Sub EditorJanuary 26, 2017 10:15 pm

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி-20’ போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் பர்வேஸ் ரசூல் அறிமுகமானார். ரெய்னா, நெஹ்ரா, யுவேந்திர சாகல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. தோனி (36) அவுட்டாகாமல் இருந்தார்.

இங்கிலாந்து அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் யுவேந்திர சாகல் 2 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி 2 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின்மூலம் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response