விளையாட்டு
Now Reading
டிவில்லியர்ஸ் பேக்: இலங்கை தொடரில் களமிறங்குகிறார்!
0

டிவில்லியர்ஸ் பேக்: இலங்கை தொடரில் களமிறங்குகிறார்!

by editor sigappunadaJanuary 24, 2017 4:00 pm

தென்னாபிரிக்கா அணி இலங்கையுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றியது. தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த பின் 28ஆம் தேதி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக காயத்தால் விளையாடாமல் இருந்த டி வில்லியர்ஸ் காயத்தில் இருந்து முற்றிலும் குணமடைந்து அணிக்கு திரும்பவுள்ளார்.

கடந்த 6 மாத காலமாக டி வில்லியர்ஸ் அணியில் இடம்பெறாததால் டு பிளிசிஸ் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக செயல்பட்டார். இவர் தலைமையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா 5-0 எனக் கைப்பற்றியது. மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 எனவும், சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 எனவும் கைப்பற்றியது.

இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்ட டி வில்லியர்ஸ், டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கப்போவதில்லை என்றும், 2019-ம் ஆண்டின் 50 ஓவர் டி20 உலகக்கோப்பை தொடர்தான் தன்னுடைய குறிக்கோள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response