மாவட்டம்
Now Reading
ஜோதிகாவின் அடுத்தப் படம் திரைக்கு வருவதில் என்ன சிக்கல்?
0

ஜோதிகாவின் அடுத்தப் படம் திரைக்கு வருவதில் என்ன சிக்கல்?

by editor sigappunadaJanuary 2, 2017 2:31 pm

திருமணத்துக்குப் பிறகு நீண்ட காலமாக நடிக்காமல் இருந்த ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு அவர், கதாநாயகர்களோடு ரொமான்ஸ் காட்சிகளிலும், வில்லனைக் கொல்வதற்காகவும் மட்டுமான நடிகையாக இல்லாமல், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைக்களத்தை தேர்வு செய்து தொடர்ந்து நடிக்கப்போவதாகவும் அறிவித்திருந்தார்.

தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ திரைப்பட இயக்குநர் பிரம்மா இயக்கத்தில் ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் இப்போது நடித்து வருகிறார். வெகு நாட்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் முடிந்துவிட்டநிலையில் தற்போது போஸ்ட்-புரொடக்‌ஷன் வேலையில் படம் இருக்கிறது. இந்த படத்தில் ஜோதிகாவுடன் பானுப்பிரியா, சரண்யா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போஸ்ட்-புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்து வருகிற பிப்ரவரி மாதம் இந்த படத்தினை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பெண்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம் உலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி ரிலீஸாவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். இந்தத் திரைப்படத்தை சூர்யா தனது 2D Entertainments பெயரில் தயாரித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response