மாவட்டம்
Now Reading
ஜெ.சவப்பெட்டியை வைத்து தேர்தல் பிரசாரம்
0

ஜெ.சவப்பெட்டியை வைத்து தேர்தல் பிரசாரம்

by editor sigappunadaApril 7, 2017 10:40 am

ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ். அணியினர் ஜெயலலிதா மரணத்தை சித்திரித்து நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ். அணியினர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை மையப்படுத்தியே பிரசாரங்களை செய்து வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின், ராஜாஜி அரங்கில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்தது. அதுபோன்ற மாதிரியை தயாரித்து வியாழக்கிழமை பிரசாரத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

இந்தப் பிரசாரத்தை முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கொருக்குப்பேட்டையில் மேற்கொண்டார். அவரின் பிரசார வாகனத்துக்கு முன்பாக, கண்ணாடி பேழையில் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருப்பது போன்ற மாதிரியை சித்திரித்து பொருத்தியிருந்தனர்.

இந்தப் பிரசாரத்தில் ஜெயலலிதாவைக் கொன்றவர்களுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பது போன்ற கருத்துகளை அவர்கள் பேசினர்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்கிவிட்டதாகவும், இதனால் எந்த பிரச்னையும் இல்லை எனவும் ஓ.பி.எஸ். அணியினர் தெரிவித்துள்ளனர். இதற்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் செயலாகும் என டி.டி.வி தினகரனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதன்பிறகு ஜெயலலிதா சவப்பெட்டி மாதிரியின் மீதுள்ள தேசிய கொடியை அகற்ற வேண்டும் என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்பின் இந்த நூதன பிரசாரத்தை ஓ.பி.எஸ். அணியினர் நிறுத்தி விட்டனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response