பேட்டி
Now Reading
‘ஜெ’ சமாதியில் ஓ.பி.எஸ் பேட்டி -போட்டு உடைத்த துணிச்சல் ஓ.பி.எஸ்
0

‘ஜெ’ சமாதியில் ஓ.பி.எஸ் பேட்டி -போட்டு உடைத்த துணிச்சல் ஓ.பி.எஸ்

by editor sigappunadaFebruary 8, 2017 6:17 am

கடந்த 5/2/2016 அன்று சுமார் நான்கு மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மதியம் 1:41 அளவில் கையெழுத்திட்ட ராஜினாமா கடிதத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார் அந்த சமயம் வித்யாசாகர் ராவ் சென்னையில் இல்லை, இந்த ராஜினாமா கடிதத்தை 6/2/2012 மாலை தமிழக ஆளுநர் ஏற்றுகொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அத்தோடு அடுத்த முதல்வர் நியமிக்கும் வரை பன்னீர் செல்வத்தையே காபந்து முதல்வராக நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த சூழ்நிலையில் இன்று இரவு சுமார் 9 மணி அளவில் எவ்வித முன் அறிவிப்புமின்றி குறைந்த பாதுகாவலருடன் திடீரென்று ஜெயலலிதா சமாதி முன் தியானம் செய்வது போல் அமர்ந்து தமிழகத்தையே அதிர்ச்சி கடலில் ஆழ்த்தினார். அவர் வெறும் தரையில் ஒரே இடத்தில் அசையாமல் கண்களை மூடி கைகளை மடிமீது வைத்து மவுனமாக சுமார் 40 நிமிடம் வரை ஜெயலலிதா சமாதி முன் அமர்ந்திருந்தார். அதன் பின் 9:42 அளவில் தனது தியானத்தை முடித்து கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு இருகைகளையும் தரையில் ஊன்றி எழுந்து நின்று அருகில் உள்ள கைப்பிடி சுவரை பிடித்து எழுந்து நின்று ஜெயலலிதா சமாதியை ஒருமுறை முழுவதுமாக சுற்றிவந்து கைகளை கூப்பி தாழிட்டு வணங்கி வந்து பின்பு பத்திரிகையாளரை சந்தித்தார்.

பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியது என்னவென்றால், புரட்சி தலைவி அம்மாவின் ஆன்மா வாழும் சமாதியில் என்மனம் உந்துதலினால் உண்மை நிலவரத்தை அறிவிக்க வந்துள்ளேன். அம்மா75 நாட்களாக நோய் வாய்ப்பட்டு மிகவும் சோதனையாகவும் வேதனையாகவும் நாட்கள் கழிந்து சென்ற போது அப்போலோ மருத்துவமனையில் “அவர்கள்” 70-வது நாள் சமயத்தில் என்னிடம் வந்து கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்றும் அதற்காக ஒரு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கூறி அதற்கு என்ன ஏற்பாடு செய்வது என்று என்னிடம் கேட்டும் ஒரு நல்ல முடிவை எடுங்கள் என்று கூறினார்கள், இதை கேட்ட நான் அரைமணி நேரம் மேலாக அழுது புலம்பினேன். அதன்பிறகு கழக பொது செயலாளர் பதவியையும் முதல் அமைச்சர் பதவியையும் ஏற்று நடத்த மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்று கூறினார்கள். அதன்படி, மதுசூதனனை பொது செயலாளராகவும் என்னை முதல்வராகவும் பொறுப்பேற்க கூறினார்கள். அந்த இக்கட்டான சூழ்நிலையை மனதில் கருதி கொண்டு, இதற்கு முன் என்னை அம்மா இரண்டு முறை முதல்வராக இருக்க சொன்னதால் ஏற்று கொண்டேன் என்றும் அதன் பிறகு அம்மாவிடமே மீண்டும் பதவியை கொடுத்துவிட்டதாலும் இவர்கள் சொன்னதை நான் மறுத்துவிட்டேன் அதற்கு அவர்கள் பொது மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நீங்கள் தான் முதல்வராக இருக்க வேண்டும் என்றும் அதில் மாற்று கருத்து இல்லை என்றும் கூறி அம்மாவின் நற்பெயருக்கு கலங்கம் வராமல் ஆட்சி செய்யவேண்டும் என்று கூறி என்னை சம்மதிக்க வைத்தார்கள். அதன்படியே அம்மாவின் மறைவிற்கு பிறகு நான் முதல்வராக பதவியேற்று அம்மாவின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்காதவாறு ஆட்சி செய்தேன்.

இதன் பிறகு திவாகர் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என் அலுவலகத்திற்கு வந்து நீங்கள் முதல்வராக பதவி ஏற்று கொண்டுவிட்டீர்கள் நாங்கள் அக்காவை ஊருக்கு கூட்டி கொண்டு போகிறோம் என்று கூறினர். இல்லையென்றால் அவரை கழக பொதுச் செயலாளராக ஆக்குங்கள் என்று கூறினார்கள் இதற்கு பிறகு அனைத்து அமைச்சர்களையும் அழைத்து ஆலோசித்தேன். அதன்படி சசிகலாவை கழக பொது செயலாளராக ஆக்குவது என்று முடிவெடுத்து பொது குழுவில்31/12/2௦16 பொது செயலாளராக நியமித்தோம். நான் தொடர்ந்து முதல்வராக பணியாற்றினேன். இந்த சமயத்தில் சென்னையில் எதிர்பாராத விதமாக வர்தா புயல் தாக்கி மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் என் அமைச்சர்கள் உதவியுடன் நான்கே நாட்களில் புயலின் சுவடே தெரியாத அளவில் சுத்தம் செய்து பொது மக்களிடம் நல்ல பெயர் பெற்றேன் மேலும் அம்மாவின் ஆட்சிக்கும் நற்பெயர் சேர்த்தேன் இது அவர்களுக்கு எரிச்சலை ஊட்டிவிட்டது .

இதன்பிறகு சென்னைக்கு நீர் வழங்கும் நீர் தேக்கங்கள் வறண்டுபோய் ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை ஏற்படுத்தக்கூடிய வறட்சியை சமாளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயடுவை சந்தித்து கிர்ஷ்ணா நதி நீரை சென்னை மக்களுக்காக கேட்டு அதை அவரும் ஏற்றுக்கொண்டு சென்னை மக்களுக்கு குடி நீர் வழங்குவதாக உறுதியளித்தார். இதனாலும் அம்மாவின் ஆட்சிக்கும் எனக்கும் பொது மக்களிடம் நற்பெயர் கூடியது.

இதன்பிறகு யாருமே எதிர்பாராத விதத்தில் நமது மரபு ரீதியான ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்க வேண்டும் என்று தமிழகம் எங்கும் மாணவர்களும் பொதுமக்களும் சேர்ந்து நடத்திய மிகப்பெரும் போராட்டத்தில் காவலர்களுடன் இணைந்து ஒழுங்காக வடிவமைத்து மக்கள் போராடி மாநில மதிய அரசுகளுக்கு கொடுத்த அழுத்தத்தினால் நான் துரிதமாக பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்தித்து ஜல்லிகட்டிற்காக அவசர சட்டத்தை ஏற்றவேண்டிய கட்டாயத்தை விளக்கினேன். அதற்கு பிரதமர் நாங்கள் வெளியிட்ட அவசர சட்டம் தான் நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளது என்றும் மாநில அரசே சட்டம் இயற்றினால் மத்திய அரசு ஒத்துழைக்கும் என்று கூறினார்

ஆகவே, நான் டெல்லியிலே தங்கி உள்துறை அமைச்சர், சுற்றுசூழல் அமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர்களை ஆலோசித்து மத்திய சட்டத்தில் தக்க மாற்று ஏற்பாடுகளை செய்துகொண்டு அதற்கு மத்திய அரசின் ஒப்புதலையும் பெற்று அவர்களே தமிழக அரசிடம் இருந்து வரும் அவசார சட்டத்திற்கு ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற்று தரவேண்டும் என்று அனுமதி பெற்று சென்னை திரும்பினேன். இதை போரட்டக்காரர்களிடம் தெரிவித்த போது அதை போரட்டக்காரர்கள் ஏற்காமல் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஆக, 23/1/2017 ஆம் நாள் தமிழக சட்டமன்றத்தை கூட்டி அதில் ஆளுநர் உரைக்கு பிறகு, வரலாறு காணாத வகையில் அன்று மாலையே மீண்டும் சட்டசபையை கூட்டி ஜல்லிகட்டிற்கான வரைவு சட்டத்தை சட்டமன்றத்தில் முன்வைத்து அதை ஏகமனதாக நிறைவேற்றி, மறுநாளே ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்கி உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி அது இரண்டு நாட்களில் ஜனாதிபதி அவர்களால் ஒப்புதல் பெற்று முழு சட்டமாக ஏற்கப்பட்டு ஜல்லிக்கட்டு காப்பற்றப்பட்டது. இதனால் மக்களிடம் அம்மாவின் அரசுக்கு நற்பெயர் கிடைத்தது.

இந்த ஜல்லிக்கட்டு விவகாரதிற்காக நான் டெல்லியில் பிரதமரை சந்திக்க சென்ற அதே சமயத்தில், தம்பிதுரையும் கழக எம்.பி.க்களை அழைத்து கொண்டு பிரதமரை சந்திக்கவேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தபோது, அவர் இருவரும் ஒரே நோக்கத்திற்காக தான் வருகிறீர்கள் என்று கூறி என்னை மட்டும் சந்தித்து ஜல்லிகட்டிற்கான தீர்வை கொடுத்தார்கள். ஆனால், தம்பிதுரையின் செயல் எனக்கு மன வருத்தத்தை அளித்தது. அதை சசிகலா அவர்களிடமும் வந்து தெரிவித்தேன். இப்படி நம் கட்சிக்குள்ளேயே மாறுபட்டால் சட்டமன்றத்தில் நமது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறினேன். அதன் பிறகு வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சின்னமா தான் முதல்வராக வரவேண்டும் என்று சட்டசபையில் பேசியது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது அது குறித்தும் சசிகலாவிடம் வந்து நீங்கள் சொன்னதால் தான் முதல்வராக இருக்கிறேன் நான்தான் அப்போதே முதல்வராக இருக்கமாட்டேன் என்று அன்றே கூறினேன் ஆகவே இவர் இப்படி பண்ணுவது நியாயமா? தர்மமா? சரியா ? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சரி நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று கூறினார்கள். அதன்பின்பு என்னை கைபேசியில் அழைத்து இனி அவ்வாறு நடக்காது என்று கூறினார்கள். ஆனால் மறுநாளே மதுரைக்கு சென்ற நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சின்னம்மா தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று பத்திரிகையில் பேட்டியளித்தார். அதற்கு மறுநாளே செங்கோட்டையனும் சின்னமாவே முதல்வராக வரவேண்டும் என்று பத்திரிகையில் கூறினார். இதனால் மனவருத்தம் அடைந்த நான் மனஉளைச்சல் மற்றும் வேதனை அடைந்து என்னை அவமானப்படுத்துவாக உணர்ந்தேன். அம்மாவின் ஆட்சிக்கு இப்படி ஒரு சோதனையை உருவாக்குகிறார்களே என்று நினைத்து கொண்டு எம்.ஜி.ஆரால் 15லட்சம் தொண்டர்களால் விடப்பட்டு அதை அம்மா 1.5 கோடி தொண்டர்களை இணைத்து 2011-ல் ஆட்சியை பிடித்து மீண்டும் 2016 மீண்டும் ஆட்சியை பிடித்து சாதனை செய்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செய்து நற்பெயர் பெற்ற ஆட்சியை அம்மாவின் நற்பெயருக்கு இப்படி விளைவிக்கிறார்களே என்று மனம் வெதும்பி வருத்தமடைந்தேன் இருந்தாலும் கட்சியின் கட்டுப்பாடு முக்கியம் என்று கருதி நான் முதல்வராக இருந்தேன். இதேமாதிரி நடந்தால் சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் கழகத்தின் பலத்தை நிரூபிக்குமாறு நெருக்கடி ஏற்படுமே என்று வருந்தினேன். இது எனக்கு மன வருத்தத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியது. என்னால், கழகத்திற்கும் ஆட்சிக்கும் ஒரு சிறு ஊறுகூட ஏற்பட்டுவிட கூடாது என்று மிகவும் கட்டுபாடுடன் இருந்தேன்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையை அடுத்த எண்ணூர் கடல் பகுதியில் நடந்த சரக்கு கப்பல் விபத்தில் கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை சுத்தம் செய்யும் பணியை மேற்பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்னைக்கு திரும்பிக்கொண்டு இருந்த போது சசிகலா என்னை அழைப்பதாக கூறினார்கள்.

நேரடியாக போயஸ் தோட்டத்திற்கு சென்றபோது அங்கிருந்த மூத்த அமைச்சர்கள் ஒன்றுகூடி என்னிடம் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள். இதைகேட்ட நான் இப்போது அதற்கு என்ன அவசரம், அப்படி என்ன சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் இரு பதவிகளையும் ஒருவரே அதாவது சின்னம்மாவே வகிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று கூறினார்கள். அதுபோல, இந்த விஷயம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விவாதிக்கப்பட்டது. அனைத்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டதாகவும் அவர்கள் தலைமை கழகத்தில் காத்திருப்பதாகவும் என்னிடம் கூறினார்கள். கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டது எனக்கு தெரியாது, எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை.

ஆகவே, இது நியாமம் தானா? முறை தானா? என்ன அவசியம் என்று கேட்டேன். இறுதியாக நான் முதல்வர் பதவி விலகி, சசிகலா முதல்வராக வருவதற்கு உதவி செய்யவேண்டும் என்று என் கையை பிடித்து கெஞ்சினார்கள். அதனால் நான் பதவி விலகவேண்டும் என்று கட்டாயத்தையும் நெருக்கடியையும் கொடுத்தார்கள். அதற்கு நான் அம்மாவின் சமாதிக்கு போய் அஞ்சலி செலுத்திவிட்டு வந்து ராஜினாமா செய்கிறேன் என்றதை ஏற்றுகொள்ளாமல், அங்கேயே நான் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று என்னை வற்புறுத்தினார்கள். ஆகவே, ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டேன்.

அதன்பிறகு அங்கிருந்து நேராக எல்லோரும் தலைமை கழகத்தில் நடைபெற்ற கழக சட்டமன்ற உறுபினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அதன்படி அவர்களே நான் ராஜினாமா செய்ததாகவும், சசிகலாவை தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்ததாகவும் அறிவுப்புகள் செய்தார்கள். ஆகவே, இந்த விஷயங்களை அம்மாவின் ஆன்மா வாழும் சமாதிக்கு வந்து அவர்களிடம் என் மனதில் உள்ள அனைத்தையும் தெரிவித்துவிட்டேன். நான் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் ஆகமட்டுமே இருப்பதில் சந்தோஷம் அடைகிறேன். தமிழக முதல்வராக வருபவர் ஒருவர், பொது மக்களால் விரும்பப்பட்டு தமிழகத்தின் எதிர்காலம் மற்றும் தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் சுயநலமில்லாமல் செயல்படுபவர் தான் முதல்வராக இருக்கவேண்டும் என்று கூறினார். இந்த விஷயங்களை பதிவுசெய்வதற்காகவே நான் இங்கு வந்தேன். என்ன ஆனாலும் தனி ஒருவனாக நின்று நான் போராடுவேன். மக்களும் தொண்டர்களும் விரும்பினால் நான் என் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன்.

அதாவது இன்று மதியம் தம்பிதுரை சசிகலாவிடம், சந்தித்தபோது ஓ.பி.எஸ் மோடியுடன் சேர்ந்து அவரின் கட்டுப்பாட்டில் முதல்வராக இருக்கிறார் என்றும் அதனால் அவரை கட்சியின் அடிப்படை உறுபினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலுவாக அழுத்தமாக கூறியதை சசிகலா கவனமாகவும் கேட்டுக்கொண்டார். இந்த விஷயத்தின் அடிப்படையில் சுமார் 40 எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ்.எஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்கள். இதன் அடிப்படையில் இன்று டெல்லி சென்று பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் சந்திக்க இருந்த பயணத்தை ரத்து செய்துவிட்டார். ஆக இந்த பரபரப்பான சூழலில் ஓ.பி.எஸ் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தமிழக அரசியிலில் மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த சூழ்நிலையில், ஓ.பி.எஸ்.க்கு 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிக்க கொடுத்த உத்தரவாதத்தின் படி சசிகலா முதல்வ ரானாலும் சட்டமன்றம் கலைக்கப்பட கூடிய சூழ்நிலை ஏற்படும்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response