மாவட்டம்
Now Reading
ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் உயிரை விட்டான்
0

ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் உயிரை விட்டான்

by editor sigappunadaApril 17, 2017 11:59 am

 

3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜெல்லி கொடுக்கக்கூடாது என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஜெல்லிக்கு தடைவிதித்துள்ளன. ஏனெனில், இவற்றில் சேர்க்கப்படும் மூலப்பொருள், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நம் நாட்டில் இது போன்ற உணவு பண்டங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.

இந்நிலையில், கேரளாவில், ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டியைச் சேர்ந்தவர் பஷீர். இவருடைய மகன் யூசுப் அலி(4). கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல்-13) யூசுஃப் அலி, அவனது தாயார் சுஹரா பீ(41), இருவரும் கோழிக்கோட்டில் உள்ள சுற்றுலாப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்துள்ளனர்.

அப்போது, கோழிக்கோட்டில் உள்ள பேக்கரி ஒன்றில் ஜெல்லி மிட்டாய் வாங்கியுள்ளனர். வீட்டுக்கு செல்லும்போது அதை சாப்பிட்டுள்ளனர். ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர்கள் கப்பாடில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை இரவு அவர்களின் நிலை மோசமடைந்ததால், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் யூசஃப் உயிரிழந்தான். அவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவனின் தாயார் சுஹரா பீ உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, குறிப்பிட்ட ஜெல்லி மிட்டாயை விற்பனை செய்த பேக்கரி கடையை போலீசார் சீல் வைத்தனர். அங்கிருந்த ஜெல்லி மிட்டாய்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

டைகர் ஹை கவுண்ட் ஜெல்லி என பெயரிடப்பட்ட அந்த ஜெல்லிகள் மதுரை கோவலன் நகர் தேசிய இனிப்பு திண்பண்ட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அந்த ஜெல்லி பாக்கெட்டில் மார்ச் 25 ஆம் தேதி பேக் செய்யப்பட்டது என அச்சிடப்பட்டிருந்தது. எனினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குழந்தையின் மரணத்துக்கான காரணம் உறுதி செய்யப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response