அரசியல்
Now Reading
ஜெயலலிதா இறந்து இன்றுடன் முப்பது நாள் ஆகிறது
0

ஜெயலலிதா இறந்து இன்றுடன் முப்பது நாள் ஆகிறது

by editor sigappunadaJanuary 5, 2017 8:07 pm

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 30-வது நாள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நுரையீரல் தொற்று காரணமாக கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவரது நினைவிடத்தில் பல்வேறு அதிமுக தொண்டர்கள் மொட்டை போட்டும் மலர் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 3௦ நாட்கள் முடிவடைகிறது. இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலமாக சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலை ராஜன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மெரினா கடற்கரை காந்தி சிலையில் இருந்து ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அமைதி ஊர்வலமாக சென்றனர்.இதில் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன், தமிழ்மகன் உசேன், கோகுல இந்திரா, எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., முருகன், சின்னையன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஜெயலலிதா சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினார்கள். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது.வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் இருந்து அமைதிப் பேரணி தொடங்கியது. ஊர்வலமாக வந்த அவர்கள் புது வண்ணாரப்பேட்டை ஏ.இ. கோவில் தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வி.என்.ரவி தலைமையில் சாலிகிராமத்தில் இருந்து கே.கே.நகர் சிவன்பார்க்கிற்கு ஊர்வலமாக வந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பாலகங்கா தலைமையில் மண்ணடியில்இருந்து ராயபுரம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார், பகுதி செயலாளர்கள் மகிழ்அன்பன், ராமஜெயம், சுகுமார், தளவாய் சுந்தரம்,பா.வளர்மதி, டாக்டர் மைத்ரேயன், நவநீத கிருஷ்ணன் எம்.பி., நடராஜன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response