மாவட்டம்
Now Reading
ஜல்லிக்கட்டை நடத்த அவசரச்சட்டம் ஒன்றே தீர்வு: ராமதாஸ்
0

ஜல்லிக்கட்டை நடத்த அவசரச்சட்டம் ஒன்றே தீர்வு: ராமதாஸ்

by editor sigappunadaJanuary 6, 2017 2:03 pm

ramadosss

 ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நிரந்தரமாக நீக்கி, அவசர சட்டம் பிறப்பிப்பது ஒன்றே தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” காலம் காலமாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்தது. தமிழக அரசும், அப்போது மத்தியில் புதிதாக பதவி ஏற்றிருந்த நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் தடையை நீக்கி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தடையின்றி நடத்தியிருக்க முடியும்.

ஆனால், மாநிலத்தை ஆளும் அதிமுக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சிகளுமே இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக மக்களை ஏமாற்றுவதில்தான் ஆர்வம் காட்டின.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள்ளாக அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பில்லை. ஒருவேளை தீர்ப்பு வழங்கப்பட்டால் கூட, ஜல்லிக்கட்டுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்துள்ள நீதிபதிகள் அப்போட்டியை அனுமதிப்பர் என்ற நம்பிக்கை இல்லை.

காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நிரந்தரமாக நீக்கும் வகையில், 1960-ம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பித்து அதன் மூலம்தான் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நீக்க முடியும்.

எனவே, அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response