மாவட்டம்
Now Reading
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள்
0

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள்

by editor sigappunadaJanuary 25, 2017 10:21 am

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அலங்காநல்லூர் கோட்டை முனிசாமி திடலில் வாடிவாசல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் பார்வையாளர்களுக்கான கேலரிகள் அமைக்கும் பணியும் தொடங்கி உள்ளது. வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் அமர்ந்து பார்க்கும் வகையில் தனித்தனி கேலரிகள் அமைக்கப்படுகின்றன.

பாலமேட்டில் மஞ்ச மலைசாமி ஆற்றுத்திடலில் உள்ள வாடிவாசல் வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள சிவன் கோவில் பகுதியில் ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன. தங்க காசுகள், வெள்ளி பொருட்கள், பீரோ, கட்டில், மின்விசிறி, சைக்கிள், பாத்திர வகைகள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இதனால் ஜல்லிக்கட்டு களைகட்ட தொடங்கி உள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response