மாவட்டம்
Now Reading
ஜல்லிக்கட்டு நிச்சயம்: பொன்னார் நம்பிக்கை
0

ஜல்லிக்கட்டு நிச்சயம்: பொன்னார் நம்பிக்கை

by editor sigappunadaJanuary 1, 2017 4:34 pm

 

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வருகை புரிந்தார். தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதற்கான அத்தனை முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். மத்திய அரசும் இந்த விஷயத்தில் அக்கறைகாட்டிவருகிறது. ஆகவே இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் திட்டம் நிறைவேற்றப்பட்டால், மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடிக்கும் நிலை தவிர்க்கப்படும். நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு சாத்தியம் இல்லை என்ற ராகுல்காந்தியின் வார்த்தையை பொய்யாக்கும் வகையில், மத்திய அரசு நதிநீர் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது,’’ என்றார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response