மாவட்டம்
Now Reading
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
0

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

by editor sigappunadaJanuary 20, 2017 9:50 am

 

Daily_News_694163761

தமிழகத்தில் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வரைவு அவசர சட்டம் உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வரைவு அவசர சட்டத்துக்கு மத்திய அரசு பரிந்துரை பேரில் ஆளுநர் அவசர சட்டம் பிறப்பிப்பார் என்றும் கூறியுள்ளார். மிருகவதை தடுப்பு சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஓரிரு நாளில் ஆளுநர் அவசர சட்டம் பிறப்பிப்பார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மேலும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்தும்வரை மெரினாவை விட்டு வெளியேற மாட்டோம் என்று மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை போராட்டம் தொடரும் என்று இளைஞர்கள் கூறியுள்ளனர். வாடிவாசல் திறக்கப்படும் வரை வீடு வாசல் செல்லமாட்டோம் என இளைஞர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஆளுநர் அவசர சட்டம் பிறப்பிப்பார் என்ற அறிவிப்பு மாபெரும் வெற்றியை அளித்துள்ளது என்று மூத்த வழக்கறிஞர் காந்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response