மாவட்டம்
Now Reading
ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
0

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

by editor sigappunadaJanuary 10, 2017 7:14 pm

கம்பம் வ.உ.சி திடலில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும். ஏறு தழுவுதல் எமது வாழ்வியல் உரிமை என்றும் கூறி நாம்தமிழர் கட்சியினர் மத்திய மாநில அரசுகளையும், பீட்டா அமைப்பினையும் கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

கம்பம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட துணைச்செயலாளர்கள் தம்பி ஆனந்தன், கருப்பையா பேசினர்.

பொங்கலுக்கு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இறுதியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வளவன் நன்றி கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்