மாவட்டம்
Now Reading
ஜல்லிக்கட்டு…… சும்மா அதிருது பாரு மெரினா…………
0

ஜல்லிக்கட்டு…… சும்மா அதிருது பாரு மெரினா…………

by editor sigappunadaJanuary 18, 2017 7:38 pm

 

148474339

ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரையில் இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று 40-க்கும்மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் அலை அலையாய் திரண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான இளைஞர்களை கொண்டு ஆரம்பித்த இந்த போராட்டம் இப்போது லட்சக்கணக்கானவர்களோடு பிரம்மாண்ட போராட்டமாக உருவெடுத்துள்ளது.கடல் அலைகளே கண்ணுக்குத் தெரியாமல் மாணவர்களின் தலைகள் மட்டுமே தெரியும் அளவுக்கு மக்கள் வெள்ளம் குவிந்துள்ளது.

14847439

சென்னை விருகம்பாக்கத்தில் தொடங்கி, மெரினா வரை நடக்கும் இந்தப் போராட்டம் சென்னையை அதிர வைத்துள்ளது. சட்டத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீது அபார நம்பிக்கை கொண்ட தமிழ் மக்கள் முதல் முறையாக வெகுண்டெழுந்துள்ளனர், தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடைக்கு எதிராக, குறிப்பாக எங்கிருந்தோ வந்த பீட்டா என்ற அமைப்புக்கு ஆதரவாகவும், தன் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக நீதி அமைப்பும், மத்திய அரசும் தொடர்ந்து செயல்பட்டு வருவது தமிழ் மக்களின் பொறுமையைச் சோதித்துவிட்டது. இன்று எந்த அரசியல் தூண்டுதலும் இல்லாமல், தன்னெழுச்சியாக ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்ற போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. உணவு, உறக்கம் மறந்து விடிய விடிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் மக்கள். இந்த நிலையில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றால் மிகையல்ல. தங்கள் கலாச்சாரம், பண்பாட்டு மீட்டெடுப்புப் போராட்டமாக இதனை மக்கள் மாற்றியுள்ளனர் என்றால் மிகையல்ல..

இப்படி ஒரு தன்னெழுச்சியான போராட்டத்தை இதற்கு முன் தமிழகம் கண்டதில்லை. மேலும் 48 மணி நேரத்தில் ஜல்லிக்கட்டு முடிவை அறிவிக்காவிட்டால் 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் போராட முன்வருவார்கள் என்ற அறிக்கையையும் விடுத்தனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டி.ஜி.பி.ராஜேந்திரனுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை மெரீனாவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வர் நடத்தி வரும் அவசர ஆலோசனைக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நூறு பேரில் துவங்கி நான்காயிரம் பேரில் தொடர்ந்து இப்போது அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களால் சூழப்பட்டுள்ளது மெரினா. இந்த போராட்டம் பல்வேறு குழுக்களால் முன்னெடுக்கப்படும் நிலையில் அரசு பேச முன்வந்தால் யாருடன் பேசுவது என்ற குழப்பமும் காணப்படுகிறது. 10 பேர் கொண்ட போராட்டக் குழு நேற்று அமைக்கப்பட்ட நிலையில், அந்தக் குழுவை அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதோடு போரட்டங்கள் பல்வேறு தரப்பினராலும் நடத்தப்படு வரும் நிலையில் ஆளுக்கொரு கோரிக்கை வைக்கிறார்கள். அரசுக்கு கெடு விதிக்கிறார்கள். இந்த போராட்டத்தின் திசை, வழிப்போக்கு குறித்து பல கேள்வி எழுகிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response