பேட்டி
Now Reading
ஜல்லிக்கட்டு காளை உருவத்துடன் தமிழ்நாட்டுக்கு தனிக் கொடி- இயக்குநர் தங்கர்பச்சான்
0

ஜல்லிக்கட்டு காளை உருவத்துடன் தமிழ்நாட்டுக்கு தனிக் கொடி- இயக்குநர் தங்கர்பச்சான்

by editor sigappunadaJanuary 22, 2017 6:15 pm

ஜல்லிக்கட்டுக் காளை உருவத்துடன் தமிழ்நாட்டுக்கென தனிக் கொடியை உருவாக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்தார்.

திருச்சிக்கு நேற்று வந்த அவர், ஜல்லிக்கட்டுக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதாவது:

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் மட்டும் போதாது. நாடாளுமன்றத்தைக் கூட்டி, ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் வரை வரை மாணவ, மாணவிகள் போராட்டத்தைக் கைவிடக் கூடாது.

பலருக்கும் தனிப்பட்ட முறையில் கொடி உள்ளது. அதேபோல, தமிழ்நாட்டுக்கென தமிழரின் பாரம்பரிய ஜல்லிக்கட்டுக் காளை உருவத்துடன் கூடிய தனிக் கொடியை மாணவர்கள் உருவாக்க வேண்டும். கடந்த 5 நாட்களாக தமிழ்நாட்டில் குற்றங்களே நடைபெறவில்லை என்று தகவல் கிடைத்தது. அதாவது, வயிற்றுப் பசிக்காக திருட்டில் ஈடுபடுவோரையும் இந்தப் போராட்டம் நல்லவர்களாக மாற்றியுள்ளது என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “ஜல்லிக்கட்டுக்காக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே தற்போது அவசர சட்டம் இயற்றுகின்றனர். காலம் காலமாக தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதியை எதிர்க்கும் நோக்கில் உருவாகியுள்ள இந்தப் புரட்சியை உலகமே வியந்து பார்க்கிறது. தமிழினம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதும், அடிமைப்படுத்தப்படுவதும், நிறைந்து கிடக்கும் அருவருக்கத்தக்க அரசியலுமே இந்தப் போராட்டத்தை மக்களிடத்தில் தன்னெழுச்சியாக உருவாக்கியுள்ளது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் ஜல்லிக்கட்டுக் காளைகள் காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இணைக்கப்பட்டன. அந்த அமைச்சரவையில் திமுகவும் இருந்தது” என்றார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response