மாவட்டம்
Now Reading
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்கு : மேனகா காந்தி மறுப்பு
0

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்கு : மேனகா காந்தி மறுப்பு

by editor sigappunadaJanuary 23, 2017 4:01 pm

 

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்க்காக தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு தடை கோரி, மத்திய அமைச்சர் மேனகா காந்தி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக, இன்று காலை தகவல் வெளியானது.

இதையடுத்து, இந்த தகவலை சில தமிழ் செய்தி சேனல்கள் செய்தியாக வெளியிட்டதன் மூலம், இந்த செய்தி பரவியது.

ஆனால், மேனகா காந்தி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த மனுவையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை, என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மற்றொரு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மேனகா காந்தியுடன் சில மணி நேரங்களுக்கு முன்பாக தொலைபேசியில் தான் பேசிய போது, அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த மனுவையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை, என்று தன்னிடம் கூறியதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response