விளையாட்டு
Now Reading
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐடி நிறுவன ஊழியர்கள்
0

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐடி நிறுவன ஊழியர்கள்

by editor sigappunadaJanuary 18, 2017 4:29 pm

ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவு கொடுக்கும் வகையில் இன்று மதியம் சென்னை ஓஎம்ஆரில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்களும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். ஆண்கள் மட்டும் இன்றி பெண்களும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று ஆவேசமாக குரல் கொடுத்து வருகின்றனர்.

டைடெல் பார்க் தொடங்கி, தரமணி,காரப்பாக்கம், சோழிங்கநல்லூர் வரை உள்ள அனைத்து ஐடி நிறுவன ஊழியர்களும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருங்குடியில் ஐ.டி நிறுவன ஊழியர்கள் 5000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஏராளமான ஐடி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரமணியில் உள்ள தனியார் ஐடி நிறுவன ஊழியர்கள் ஏராளமானோர் பணிகளை புறக்கணித்துவிட்டு, அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிண்டி ஒலிம்பியாவில் ஐடி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களும், சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகேந்திரா சிட்டி ஐடி ஊழியர்கள் மறைமலைநகர் முதல் செங்கல்பட்டு பைபாஸ் வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அவர்கள் அனைவரும் பீட்டாவை தடை செய்யக் கோரியும், தமிழகத்தின் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்றும் பதாகைகளைத்தாங்கியும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மெரினாவை தொடந்து ஓஎம்ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response