சினிமா
Now Reading
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கும் சினிமா பிரபலங்கள்
0

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கும் சினிமா பிரபலங்கள்

by editor sigappunadaJanuary 10, 2017 8:12 pm

கமல், சூர்யாவைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனுஷ், சிவகார்த்திகேயன், அசோக் செல்வன் ஆகியோர் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழகம் எங்கும் ஆதரவு பெருகி வருகிறது. இப்போட்டிக்கு கமல், சூர்யா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனுஷ், “ஜல்லிக்கட்டு தமிழர்களின் குரலிலும் அடையாளத்தில் ஒருங்கிணைந்த அம்சம். நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன். நமக்கு ஜல்லிக்கட்டு தேவை” என தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் “ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு..அதை மீட்க விரும்பும் பல கோடிபேரில் ஒரு தமிழனாய் நானும்” என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

‘கொம்புவச்ச சிங்கம்டா’ என்ற பெயரில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அருண்ராஜா காமராஜ் இணைந்து உருவாக்கிய பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான புகைப்படத்தை ட்விட்டர் தளத்தில் தங்களுடைய முகப்பு படமாக மாற்றியுள்ளார்கள்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response