அரசியல்
Now Reading
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரளும் இளைஞர்கள்
0

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரளும் இளைஞர்கள்

by editor sigappunadaJanuary 8, 2017 4:48 pm

 

53060114383

ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுக்க திரண்ட இளைஞர்களால் சென்னை மெரினா ஸ்தம்பித்தது. காலை முதலே கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் திரண்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் மூலமாக தகவலை பகிர்ந்து இளைஞர்கள் திரண்டனர். ‘ஏறு தழுவுதல் எம்இனத்தின் உரிமை’ என்ற பேரணி முழக்கத்துடன் இளைஞர்கள் எழுச்சி பேரணி நடத்தினர்.

இதற்கு ஆதரவு பெருகி வருகிறது. விவசாயிகளுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் இளைஞருக்கு விவசாயிகள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளனர். சமூக அக்கறையோடு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதற்கு பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். இளைஞர்கள் போராட்டம் மூலம் தமிழ்நாட்டு பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இனியாவது ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response