மாவட்டம்
Now Reading
ஜம்மு காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை: 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
0

ஜம்மு காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை: 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

by editor sigappunadaJanuary 24, 2017 2:27 pm

காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மத்திய காஷ்மீரின் கண்டர்பால் மாவட்டம் ஹதூரா பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு சென்று தீவிரவாதிகள் இருந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

 இரு தரப்புக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையே சுந்தர்பானி செக்டாரில் ஊடுருவ முயன்ற மர்ம நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்று ஊடுருவல் முயற்சியை முறியடித்துள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response