பேட்டி
Now Reading
ஜனவரி 13 வரை கார்டுகளை பயன்படுத்தலாம் – பெட்ரோல் பங்குகள் தாராளம்
0

ஜனவரி 13 வரை கார்டுகளை பயன்படுத்தலாம் – பெட்ரோல் பங்குகள் தாராளம்

by editor sigappunadaJanuary 9, 2017 8:05 pm

வரும் ஜன-13 ஆம் தேதிவரை, அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் வழங்கினால் இழப்பு ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்திற்கு கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால் ௦.75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியிட்ட சில நாட்களிலேயே கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதற்கு ஒரு சதவீதம் பரிமாற்றக் கட்டணம் பெறப்படும் என பெட்ரோல் நிலையங்களுக்கு வங்கிகள் அறிவித்தது. இதனால், தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகக் கூறி பெட்ரோல் உரிமையாளர் சங்கம் இன்று முதல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்று அறிவித்தது.

இதற்கு லாரி உரிமையாளர்கள் உட்பட வாகன ஓட்டிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவித்த பிறகு பெரும்பாலான லாரி உரிமையாளர்களும், வாகன ஓட்டிக்களும் கார்டுகளையே பயன்படுத்தி வந்தனர். மேலும், லாரி உரிமையாளர்கள் நாளொன்றுக்கு 30 முதல் 40 ஆயிரம் வரை டீசல் போடப்படுகிறது இந்நிலையில், இந்த அறிவிப்பால் லாரிகளை இயக்குவதில் சிரமம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு 1 சதவீத வரி விதிக்கும் முடிவை வங்கிகள் நிறுத்தி வைத்ததையடுத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு ஜன-13 ஆம் தேதி வரை பெட்ரோல் டீசல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. முரளி, பொதுச் செயலர் ஹைதர் அலி கூறியதாவது:

டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பெறப்படும் 1 சதவீத வரி விதிப்பை வரும் 13-ஆம் தேதி வரை வங்கிகள் நிறுத்தி வைத்திருப்பதாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வரும் 13-ஆம் தேதி வரை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு எண்ணெய் வழங்க முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

பெட்ரோல் நிலையங்களில் நாளொன்றுக்கு ரூ. 1,500 வாடிக்கையாளர்கள் வரையிலும், சிறிய நிலையங்களில் 750 முதல் 900 வாடிக்கையாளர்களுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படுகிறது. அதன்மூலம் சராசரியாக ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இதில், ஒரு சதவீதம் வரி பெற்றுக்கொண்டால் நாளொன்றுக்கு ரூ.6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை இழப்பீடு ஏற்படும். மாதத்திற்கு ரூ.3 லட்சம் வரை இழப்பீடு ஏற்படும் என்று கூறியுள்ளார்கள். இதுகுறித்த உறுதியான முடிவை மத்திய அரசும் வங்கிகளும் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response