மாவட்டம்
Now Reading
செல்பி ஆசையில் முதலையிடம் கடி வாங்கிய பெண்
0

செல்பி ஆசையில் முதலையிடம் கடி வாங்கிய பெண்

by editor sigappunadaJanuary 2, 2017 6:01 pm

இளைய தலைமுறையினர் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரையும் செல்பி மோகம் ஆட்டிப்படைத்து வருகிறது. சமூக வலைதளங்களில் லைக்குகள் பெறுவதற்காக ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வரிசையில் முதலையுடன் செல்பி எடுக்க முயன்ற பிரெஞ்சுப் பெண்ணை அந்த முதலை கடித்துக் குதறிய சம்பவம் தாய்லாந்து நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த காவ் யாய் தேசிய பூங்காவுக்கு சுற்றுலா வந்த முரியல் பெனுடுலியர் (41) என்ற பிரெஞ்சுப் பெண் பூங்காவில் உள்ள முதலையுடன் செல்பி எடுக்க முயற்சித்தார். செல்பி எடுக்க முயற்சித்த போது முதலை இருந்த ஓடையில் முரியல் தவறிவிழ, முதலை அவரது காலைக் கடித்து விட்டது.

கடும் முயற்சிக்குப் பின் காப்பாற்றப்பட்ட அந்த பெண்ணுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து காலில் கட்டுப்போட்டுள்ளனர். இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response