மாவட்டம்
Now Reading
செலவினம் குறைந்த நகரம் : சென்னைக்கு ஆறாவது இடம்!
0

செலவினம் குறைந்த நகரம் : சென்னைக்கு ஆறாவது இடம்!

by editor sigappunadaMarch 22, 2017 4:26 pm

உலகளவில் செலவினம் குறைவாக உள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை 6வது இடத்தைப் பிடித்துள்ளது.

நகரின் வாழ்க்கைத்தரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதிலும் இருந்து 133 நகரங்களில் மக்களின் அன்றாடத் தேவையான உணவு, உடை, மின்சாரம், வீட்டு வரி, தொலைபேசி, இணையதளம், குடிநீர் போன்ற 160 செலவினங்களை ஒப்பிட்டு ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார புலனாய்வு அமைப்பு ஆய்வு செய்து பட்டியலை வெளியிடுகிறது.

அதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான பட்டியலை பொருளாதார புலனாய்வுப் பிரிவு நிறுவனம் நேற்று வெளியிட்டது. இந்தியாவைச் சேர்ந்த டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்கள் உலகளவில் செலவினம் குறைவாக உள்ள நகரங்களில் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

செலவினம் குறைவான நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள நகரங்களின் வரிசை, முதலிடத்தில் அல்மாட்டி – கஜகிஸ்தான், இரண்டாவது இடத்தில் லாகோஸ் – நைஜீரியா, மூன்றாவது பெங்களூரு, நான்காவது கராச்சி – பாகிஸ்தான், ஐந்தாவது அல்கேரிஸ் – அல்ஜீரியா, ஆறாவது சென்னை, ஏழாவது மும்பை, எட்டாவது கீவ் – உக்ரைன், ஒன்பதாவது புச்சாரெஸ்ட் ரோமானியா, டெல்லி பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

அதேபோல, அதிக செலவாகும் நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஹாங்காங்கும், மூன்றாவது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரமும் பிடித்துள்ளன.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response