மாவட்டம்
Now Reading
செம்மரக் கட்டைகள் லாரியுடன் பறிமுதல் – மதிப்பு ஒரு கோடி ரூபாய்
0

செம்மரக் கட்டைகள் லாரியுடன் பறிமுதல் – மதிப்பு ஒரு கோடி ரூபாய்

by editor sigappunadaMarch 13, 2017 10:47 am

கும்மிடிப்பூண்டி அருகே ஆரம் பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போலீ ஸார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து லாரி ஒன்று நேற்று அதிகாலை 4 மணிக்கு அவ்வழியாக வந்தது. போலீஸார் லாரியை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், லாரி நிற்காமல் சென்றது.

இதையடுத்து, போலீஸார் விரட்டிச் சென்று பஞ்செட்டி அருகே லாரியை மடக்கிப் பிடித்தனர். அப்போது லாரியில் இருந்த ஓட்டுநர் உள்பட 6 பேரும் தப்பி ஓடினர். லாரியில் சுமார் 10 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி. இதையடுத்து, லாரி மற்றும் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

செம்மரக் கட்டைகள் ஆந்திரா வில் எந்தப் பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டன. இதில் தொடர்புடைய முக்கிய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தப்பி ஓடிய 6 பேரை தேடி வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response