மாவட்டம்
Now Reading
சென்னை எண்ணூரில் 3 வயது சிறுமி கடத்திக் கொலை:பொதுமக்கள் சாலை மறியல்
0

சென்னை எண்ணூரில் 3 வயது சிறுமி கடத்திக் கொலை:பொதுமக்கள் சாலை மறியல்

by editor sigappunadaFebruary 19, 2017 2:47 pm

சென்னை எண்ணூரில் 3 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சிறுமி கிருத்திகா, நேற்று பிற்பகல் அருகே உள்ள வீட்டுக்கு விளையாட சென்றார்.சிறிது நேரம் கழித்து கிருத்திகாவின் தாய் அங்கு சென்ற போது சிறுமியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிருத்திகா கிடைக்காததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மணலி விரைவுச்சாலையில் உள்ள குப்பைக்கிடங்கில் உடலில் பலத்த காயங்களுடன், வாயில் துணியை வைத்து மூடிய நிலையில் சிறுமியின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் விசாரித்த போது, அது மாயமான சிறுமி கிருத்திகா என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமி கிருத்திகாவை அழைத்து சென்றதாக கூறப்படும் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே, இச்சம்பவத்தை கண்டித்து எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response