மாவட்டம்
Now Reading
சென்னைவாசிகளுக்கு கொண்டாட்டம்… வருகிறது படகு போட்டி
0

சென்னைவாசிகளுக்கு கொண்டாட்டம்… வருகிறது படகு போட்டி

by editor sigappunadaJanuary 8, 2017 12:32 pm

462275029

சென்னை படகு கிளப்பின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, கிளப்புகளுக்கு இடையேயான 75-ஆவது ரெகட்டா படகுப் போட்டி
சென்னையில் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை படகு கிளப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை படகு கிளப்பில் ஜனவரி 11-ஆம் தேதி தொடங்கும் இந்தப் படகுப் போட்டி, 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கொல்கத்தா, புணே, கொழும்பு, பெங்களூரு, கொடைக்கானல், சென்னை என 13 படகுக் கிளப்புகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் மொத்தம் 240 பந்தயங்கள்
நடத்தப்பட உள்ளன. இதுதவிர, “மாஸ்டர் ரோவர்ஸ்’ பிரிவில் 35 வயதினருக்கும், “சூப்பர் மாஸ்ட்ர்ஸ்’ பிரிவில் 55 வயதினருக்கும் ரெகட்டா படகுப் போட்டி
நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து 76-ஆவது ரெகட்டா படகுப் போட்டி துபையிலும், 77-ஆவது ரெகட்டா படகுப் போட்டி இலங்கையிலும் நடைபெறவுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response