மாவட்டம்
Now Reading
சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
0

சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

by editor sigappunadaMarch 7, 2017 11:03 am

இலங்கை கடற்படையினரால்  தமிழக மீனவர் பிரிட்கோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மீன்பிடி தளத்திலிருந்து 6.3.2017 அன்று இராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த மீனவர்கள் அவர்களின் விசைப் படகில் பாக் வளைகுடாவில் அவர்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இரவு சுமார் 9.30 மணி அளவில் மேற்கண்ட மீன்பிடி விசைப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அப்பாவி மீனவர்களை நோக்கி அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எவ்வித அறிவிப்பும் இன்றி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இத்துப்பாக்கிச் சூட்டில், அப்படகிலிருந்த இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இச்சம்பவத்தில் காயமடைந்த சரோண்  இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அன்னாருக்கு தொடர்ந்து உரிய சிகிச்சை அளிக்கநடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் பழனிசாமி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை பிடித்தும், அச்சுறுத்தியும், படகுகளை கைப்பற்றுவதும், தொடர் நடவடிக்கையாக இருந்து வருவதை தமிழக அரசு அவ்வப்போது மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி, நிரந்தர தீர்வு காண வற்புறுத்தி வந்துள்ளது.

தற்போது நடத்திய இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு முதல்வர் பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இத்துப்பாக்கிச் சூட்டில் அகால மரணமடைந்த பிரிட்ஜோ குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

இத்துயரச் சம்பவத்தில் காலமான பிரிட்ஜோவின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாயும், காயமடைந்த சரோணுக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response