சினிமா
Now Reading
சிவகார்த்திகேயன்- பொன்ராம் கூட்டணியில் புதிய படம்
0

சிவகார்த்திகேயன்- பொன்ராம் கூட்டணியில் புதிய படம்

by editor sigappunadaMarch 19, 2017 1:06 pm

சிவகார்த்திகேயன் நம்பிக்கையான ஹீரோவாக மாறிவிட்டது, அதிக பட்ஜெட்டில் அவரை வைத்து தயங்காமல் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் மூலமாகவே தெரிகிறது. அதேசமயம், அவரது தயாரிப்பாளர்கள் குறிப்பிட்ட சமயத்தில் சிலராகவே இருப்பதும் குறிப்பிடவேண்டியது. பாண்டிராஜின் மூலமாக சினிமாவுக்கு வந்தவர், மதன் மூலமாக சில படங்கள் கண்டு, தனுஷ் தயாரிப்பில் வெற்றி ஹீரோவாக மாறினார்.

இப்போது அவரது களம் ஆர்.டி.ராஜா. ரெமோ படத்தில் ஆர்.டி.ராஜாவுடன் இணைந்தவர் அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் திரைப்படத்திலும் ராஜாவுடனே தொடர்ந்தார். தயாரிப்பாளர்களுடன் இப்படி தொடர்ந்து படம் செய்தாலும், இயக்குநர் விஷயத்தில் கறாராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். ரெமோ, வேலைக்காரன் என இரண்டு ஆக்‌ஷன் அல்லது ஸ்கிரிப்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் நடித்துவிட்ட சிவகார்த்திகேயன் அடுத்து பொன்ராம் இயக்கத்தில் கிராமம் சார்ந்த பக்கா கமெர்ஷியல் திரைப்படத்தில் நடிக்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் நடித்த இரண்டு திரைப்படங்களுமே அதகளமான ஹிட் அடித்தவை என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவர்களது கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் எப்படி இருக்கப்போகிறது எனப் பார்க்கும் ஆவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அளவுக்கதிகமாகவே உள்ளது.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response