க்ரைம்
Now Reading
சின்னத்துக்கு லஞ்சம்: தினகரன் வழக்கில் ஹவாலா தரகர் டெல்லியில் கைது
0

சின்னத்துக்கு லஞ்சம்: தினகரன் வழக்கில் ஹவாலா தரகர் டெல்லியில் கைது

by editor sigappunadaApril 28, 2017 1:38 pm

அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு உதவியதாக ஹவாலா தரகர் ஒருவர் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். டெல்லியில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த 16-ம் தேதி இரவு கைது செய்தனர். அவருக்கு முன்பணமாக ரூ.10 கோடி கொடுக்கப்பட்டது தெரியவந்தது. சுகேஷிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய், 2 சொகுசு கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் தினகரன் – சுகேஷ் சந்திரசேகர் இடையே ரூ.10 கோடி பணப் பரிவர்த்தனை நடக்க உதவியதாக டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஹவாலா இடைத்தரகர் நரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ததை டெல்லி போலீஸாரும் உறுதி செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஏற்கெனவே கோபி, பைசல் சாஹா என இரண்டு ஹவாலா இடைத்தரகர்கள் பெயர் அடிபட்டுவரும் நிலையில் மூன்றாவதாக நரேஷ் என்ற ஹவாலா தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நரேஷைத் தவிர மேலும் ஒருவரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால், அவர் குறித்த விவரங்களை போலீஸார் தெரிவிக்கவில்லை.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response