மாவட்டம்
Now Reading
சிக்கன் 65 ஆகும் செத்த கோழிகள் உயிருக்கே ஆபத்து?
0

சிக்கன் 65 ஆகும் செத்த கோழிகள் உயிருக்கே ஆபத்து?

by Sub EditorFebruary 7, 2017 11:39 am

அசைவப் பிரியர்களின் அடிவயிற்றில் அடிக்கும் அதிர்ச்சி செய்தியாக ஒரு செய்தி திருப்பூர் மாவட்டத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. செத்த கோழிகளை சிக்கன் 65 என்று விற்பனை செய்த தகவல் வந்ததால், சிக்கன் சாப்பிட்டவர்கள் எல்லாம் ‘வாவ்..’ என்ற குமட்டலோடு இருக்கிறார்கள். செத்துப்போன கோழிகள் எப்படி விற்பனைக்கு வருகின்றன? திருப்பூரில் கோழிப்பண்ணைகள் அதிக அளவில் இருக்கின்றன. இட நெருக்கடி, காலநிலை மாறுபாடு, அதிக பனி, போன்ற காரணங்களால், பண்ணையில் தினசரி நூற்றுக்கணக்கான கோழிகள் இறந்து போவதுண்டு. சில நேரங்களில் நோய் தாக்கி இறப்பதும் உண்டு. பண்ணையாளர்களும், இறந்த கோழியை அப்புறப்படுத்தி புதைக்க, தனியே சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதால், அவற்றை குறைந்த விலைக்கு விற்று விடுகின்றனர்.
அப்படி இறந்த கோழிகளை பணத்தாசைப் பிடித்த சிலர் வாங்கி, தெருவோரக் கடைகள், டாஸ்மாக் பார்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனர். அவர்களும் மலிவு விலையில் கிடைக்கிறதே என்று அதை வாங்கி சில்லி சிக்கன், பிரியாணி செய்து விற்பனை செய்கிறார்கள். அசைவப் பிரியர்களும் மலிவான விலையில் கிடைப்பதால் பிரியாணி, சிக்கன் 65, சில்லி சிக்கனை வாங்கி ருசிக்கிறார்கள். ஆனால், அவை செத்துப்போன கோழிகளில் செய்த பிரியாணி என்பது தெரியாமலே சாப்பிட்டுச் செல்கின்றனர்.

இறந்த கோழிகளை சாப்பிடுவதால் என்ன பிரச்னை என்று மருத்துவர்களிடம் கேட்டபோது, “ இறந்த கோழிகளின் இறைச்சியை உட்கொள்வதால், வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. மேலும் அவற்றை உண்பது, நாளடைவில் கேன்சரை வரவழைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் பலவீனமாகிவிடும். அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படும். இறந்த கோழிகள் சமைத்த பிறகு அதைக் கண்டுபிடிக்க முடியும். அதாவது கடினமாகவும், சவுத்துப்போன மாதிரியும் இருந்தால், அது இறந்த கோழி என்பதை தெரிந்து கொள்ளலாம்.” என்று எச்சரிக்கின்றனர்.

நடைபாதை கடைகளில் விற்கப்படும் அசைவ உணவுகள் தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்து, தரமற்ற உணவுகளை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், இறக்கும் கோழிகளை பண்ணையாளர்களே குழி தோண்டி, சுண்ணாம்பு தூள், கிருமி நாசினி தெளித்து புதைக்க வேண்டும் ஆனால் அவர்கள் அதைச் செய்வதில்லை. இறந்த கோழிகளை விற்கும் பண்ணையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. இவற்றை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கண்டும் காணாமல் இருந்து விட்டு, இப்போது விஷயம் வெளியில் தெரிந்ததும்,அதை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்திருப்பதாக கடைசி நேர செய்தி வந்திருக்கிறது.

– அமானுல்லா

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response