மாவட்டம்
Now Reading
சாப்பிட வேண்டாம் – ஓட்டல்கள் சங்கம் கறார், வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு
0

சாப்பிட வேண்டாம் – ஓட்டல்கள் சங்கம் கறார், வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு

by editor sigappunadaJanuary 4, 2017 1:41 pm

ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் விருப்பத்தின் அடிப்படையில்தான் சேவை கட்டணம் வழங்க வேண்டும். சேவையில் திருப்தி அடையாவிட்டால் அந்த வாடிக்கையாளர்கள் கட்டணத்தை வழங்க தேவையில்லை என நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அதற்கு பதிலடியாக,இந்திய தேசிய ரெஸ்டாரன்ட் சங்க தலைவர் ரியாஸ் அம்லானி கூறியதாவது;நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விதிகள் அனைத்தையும் ரெஸ்டாரன்ட்கள் கடைப்பிடிக்கின்றன. மெனு பட்டியலில் சேவை கட்டணம் குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். எனவே, நியாயத்தை மீறி நாங்கள் செயல்படுவதாக கூற முடியாது. இவை ஊழியர்களுக்கு சமமாக பிரித்து அளிக்கப்படுகிறது. இதற்கு ஊழியர்கள் வருமானவரி செலுத்துகின்றனர். பில் தொகைக்கு வாட் வரி செலுத்தப்படுகிறது.  மெனுவில் சேவை கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதை  செலுத்த விரும்பாதவர்கள், அந்த உணவு பொருளை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து விடலாம் என்றார்.

இந்தப் பேச்சு வாடிக்கையாளர்களை மிரட்டுவதாக இருக்கிறது, வாடிக்கையாளர்கள் சேவை வரி கட்டாயம் செலுத்தியாக வேண்டும் என்று கட்டாயப்டுத்துவது போலவும் இருக்கிறது என்று சென்னையில் வாடிக்கையாளர்கள் ஓட்டல் சங்கத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒரு உணவை சாப்பிட்ட பின்புதான் அதன் சேவை குறித்து கண்டறிய முடியும், அப்படியிருக்க முன்பே எப்படி கண்டறிந்து வேண்டாம் என்று எப்படி தவிர்ப்பது என் றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response