க்ரைம்
Now Reading
சாப்பாடு டோக்கன் கேட்கும் பல்லாவரம் எழுத்தர்
0

சாப்பாடு டோக்கன் கேட்கும் பல்லாவரம் எழுத்தர்

by Sub EditorApril 17, 2017 1:40 pm

சென்னை பல்லாவரம் (எஸ்.5) காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்க வருவோர் புலம்பியபடி செல்கிறார்கள். காரணம் லஞ்சம்தான்.வணிகர்கள், பிளாட்பார கடைகள் மற்றும் பொதுமக்கள் என்று பல்லாவரம் காவல்நிலையத்தின் மீது புகார் கூறுபவர்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.

லஞ்சம் வாங்குவதில் கருணையே கிடையாது. தினமும் ஐந்து ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்கும் பூ விற்று பிழைக்கும் பூக்காரர்களைக் கூட விடுவதில்லை. வாழைப்பழம் விற்கும் தள்ளுவண்டிகளில் கூட இருப்பதை பிடுங்கி கொண்டு செல்கிறார்கள். இதில் காவல்நிலையத்தில் இருப்பவர்களிடையே போட்டி வேறு. இங்கு எழுத்தராக இருப்பவர் கணேசன், இவர் காவல் நிலைய ஆய்வாளராக இருக்கும் வெங்கடேசனை கொஞ்சம் கூட மதிப்பதில்லையாம். ஆய்வாளர் வெங்கடேசன் கண்டித்ததால், உடனே மேலதிகாரியான உதவி ஆய்வாளரிடம் வெங்கடேசன் பற்றி புகார் கொடுத்து மாற்றி விட்டார்.
பெண் காவலர்களான வானதி, தேன்மொழி ஆகியோரை வைத்து கூட்டாக வசூல் வேட்டையில் இறங்கி விடுகிறாராம் கணேசன். உதவி ஆய்வாளரின் சப்போர்ட் இவருக்கு இருப்பதால் காவல்நிலைய பணிகளை சரிவர செய்யாமல், வசூல் வேலையில் மட்டும் மும்முரம் செலுத்துகிறார் என்று சக போலீசாரே குற்றம்சாட்டுகிறார்கள்.

இவர் இதற்கு முன்பு வேலைபார்த்த பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் எஸ்,எஸ்,ஐ துரைசாமி என்பவரை உடன் வைத்துக் கொண்டு தீவிர வசூல் செய்து காவல்நிலையத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர். அந்த துரைசாமி இவரைவிட பலே கில்லாடி, பொதுமக்களிடம் ஒரு புகாரை வாங்க ஐந்நூறு ரூபாய் பணம், ஒரு வேளை சாப்பாடு என்று கண்டிஷன் போட்டு வசூல் செய்து பெயர் வாங்கியவர். அதில் பிரச்னை வந்தபோது அதற்கு இடையூறாக இருந்த ஆய்வாளர் பற்றி உயரதிகாரிடம் புகார் கொடுத்து மாற்றல் செய்ய வைத்தவர்கள்தான் இருவரும். அந்த அளவிற்கு கைதேர்ந்தவர்களாம்.
கணேசன் பல்லாவரம் காவல்நிலையத்திற்கு வந்தபிறகு புகார் கொடுக்க வருவோரின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. ‘நமக்கு பிரச்னை என்று புகார் கொடுக்க இங்கு வந்தால், இந்த புகாரை எங்கு போய் கொடுப்பது?’ ஒரு சிலரைத் தவிர பெரும்பாலும் சுயநலமாக இருக்கிறார்கள் காவல்துறையில் என்று வேதனைப்படுகிறார்களாம் பொதுமக்கள்.

– வி.ராஜ்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response