உலகம்
Now Reading
சலுகை மூலம் வாடிக்கையாளர்களை கவரும் வோடபோன்
0

சலுகை மூலம் வாடிக்கையாளர்களை கவரும் வோடபோன்

by editor sigappunadaJanuary 7, 2017 7:32 pm

சமீபத்தில் 4ஜி மற்றும் 3ஜி வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய வோடஃபோன் நெட்வொர்க், ஒருமணி நேரத்துக்கு வரம்பற்ற டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சிறப்புச் சலுகையை இன்று அறிவித்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி, வோடஃபோன் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.16க்கு ரீசார்ஜ் செய்தால், அவர்கள் வரம்பற்ற (அன்லிமிடெட்) 3ஜி மற்றும் 4ஜி டேட்டாவைப் பெற இயலும். மேலும், இதே திட்டத்தில் ரூ.7க்கு ரீசார்ஜ் செய்தால், வோடஃபோன் – வோடஃபோன் அழைப்புகள் ஒரு மணி நேரத்துக்கு முற்றிலும் இலவசம். 2ஜி வாடிக்கையாளர்கள் இந்த சலுகையையைப் பெறவேண்டுமானால் அவர்கள் ரூ.5க்கு ரீசார்ஜ் செய்யும்போது இச்சலுகைகளைப் பெறலாம்.

இதுகுறித்து வோடஃபோன் இந்தியா நிறுவன தலைமை வர்த்தக அதிகாரியான சந்தீப் கட்டாரியா பேசுகையில், ‘சூப்பர் ஹவர் என்று பெயரிடப்பட்டு இந்த சிறப்புச் சலுகையில், ஒரு மணி நேரத்துக்குள் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு டேட்டாவை டவுண்லோடு செய்துகொள்ளலாம். இத்திட்டத்தில் மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இச்சலுகையை வாடிக்கையாளர்கள் பெற்று மகிழலாம். இதில் வரம்பற்ற அழைப்புகள் வசதியும் இருப்பதால் வோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக அமையும்’ என்றார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response