சினிமா
Now Reading
சர்ச்சையில் சிக்கிய நடிகை நயன்தாரா!
0

சர்ச்சையில் சிக்கிய நடிகை நயன்தாரா!

by Sub EditorMarch 4, 2017 2:58 pm

நடிகை பாவனாவுக்கு நடந்த கொடூரத்தால் திரையுலகைச் சார்ந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவத்துக்கு முதல் காரணமாக இருந்தது பாவனாவின் டிரைவர் என்பது தான் திரையுலகினரின் அதிர்ச்சிக்கு முக்கிய காரணம். திரையுலகில் பிரபலமாக இருப்பவர் எப்படி ஒரு நம்பிக்கை இல்லாத நபரை வேலைக்கு வைத்திருந்தார் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது.
இந்நிலையில் நயன்தாராவின் டிரைவர் சேது, ஷெர்தாலாவில் நடந்த அரசியல் கொலையில் 5ஆவது குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் நயன்தாராவிடம் பணிபுரியும் சமயத்தில் தான் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனாலும் நயன்தாரா அவரை பணிநீக்கம் செய்யாமல் தன்னுடைய டிரைவராகவும் பாதுகாவலராகவும் வைத்திருக்கிறார். இவர், நயன்தாரா திரைத்துறைக்கு வந்ததிலிருந்தே டிரைவராக இருக்கிறார்.
பல ஆண்டுகளாக தனக்கு விசுவாசியாக இருந்ததால் இந்த குற்றத்தைத் தாண்டியும் அவரை உடன் வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்தாலும், அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை நயன்தாரா. ஆனால் இப்போது பாவனா அவரது டிரைவர் மூலமாகவே பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
என்ன செய்யப் போகிறார் நயன்தாரா?

– நிவாஸ்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response