பேட்டி
Now Reading
சமாஜ்வாடியில் பிளவு, சமாளிக்க முடியாத மூலயாம் சிங் யாதவ்
0

சமாஜ்வாடியில் பிளவு, சமாளிக்க முடியாத மூலயாம் சிங் யாதவ்

by editor sigappunadaJanuary 1, 2017 1:45 pm

சமரச முயற்சிக்குப் பிறகும், சமாஜ்வாடிக் கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.

சமாஜ்வாடி கட்சி செயற்குழுவைக் அவசரமாகக் கூட்டிய அகிலேஷ், அக்கட்சியின் தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தையும் கட்சி தலைவருமான முலாயம்சிங் யாதவுக்கும் இடையே வேட்பாளர் தேர்வில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் மூத்த அமைச்சர்களில் ஒருவரான அசம்கான் முலாயம்சிங் யாதவை சந்தித்து சமரச நடவடிக்கையை மேற் கொண்டார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவ், ராம்கோபால் யாதவ் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை முலாயம்சிங் யாதவ் ரத்து செய்தார். தந்தை-மகன் இடையேயான மோதலுக்கு கட்சியின் மூத்த தலைவரான அமர்சிங் தான் காரணம் என்று அகிலேஷ் யாதவ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

அமர்சிங்கை கட்சியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் போர்க்கொடி உயர்த்தினார். மேலும் சமாஜ்வாடி கட்சியின் செயற்குழு கூட்டத்தை இன்று லக்னோவில் அவசரமாக கூட்டினார். கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் மாநில தலைவர் சிவபால் யாதவ் ஆகியோரும் அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்தனர். இந்த கூட்டத்தில் சமாஜ் வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை பொது செயலாளர் ராம்கோபால் யாதவ் அறிவித்தார். அத்துடன் மாநில தலைவர் பதவியில் இருந்து சிவபால் யாதவ் நீக்கப்பட்டார். முன்னாள் பொதுச் செயலாளரான அமர்சிங் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில்இருந்து நீக்கப்பட்டார். சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக முலாயம் சிங் யாதவ் இருந்து வருகிறார்.

அவரது பெயரை நீக்கம் என்று குறிப்பிடாமல் அகிலேஷ் யாதவ் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே முலாயம் சிங் யாதவ் கட்சியின் மூத்த தலைவராக நீடிப்பார் என்றும் அவரது வழி காட்டுதலின் கீழ் செயல் படுவோம் என்றும் ராம் கோபால் யாதவ் அறிவித்துள்ளார். இதை ஏற்க மறுத்த முலாயம் சிங் யாதவ் இந்த கூட்டம் சட்டப்படி செல்லாது என்றும் இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தங்களை கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் சமாஜ்வாடி உடைகிறது. கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசுகையில், மாநில தலைவர் பதவியில் இருந்து சிவபால் சிங் யாதவை நீக்க வேண்டும் என்று முலாயம்சிங் யாதவ் தான் கூறினார், அதன்படி நான் நடவடிக்கை எடுத்து இருக்கிறேன், எனக்கும், தந்தைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடானது கட்சியில் குழப்பம் விளைவிப்பவர்களால் தான் உருவானது என்றார்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response