மாவட்டம்
Now Reading
சந்திக்க வருவோரை குரூப் போட்டோ எடுத்துக்கச் சொல்லும் சசிகலா
0

சந்திக்க வருவோரை குரூப் போட்டோ எடுத்துக்கச் சொல்லும் சசிகலா

by editor sigappunadaJanuary 8, 2017 11:45 am

sasikala5f

அதிமுக புதிய பொதுச்செயலாளர் சசிகலா, மாவட்ட நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார். தலைமை கழகத்தில் ஜனவரி 4-ஆம் தேதி முதல் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து வரும் அவர் நேற்று காலை நாகை மாவட்டம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். நேற்று மாலை 3.00 மணிக்கு கடலூர், விழுப்புரம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்,

மாவட்ட நிர்வாகிகள் தலைமை கழகத்திற்கு வந்ததும், தலைமை கழகச் செயலாளர் மகாலிங்கம் அரை மணிநேரத்துக்கு முன்கூட்டியேவந்து, அனைவரும் அமைதியாக இருங்கள், சின்ன அம்மா வருவாங்க, வந்ததும் எழுந்து நில்லுங்க. உங்களிடம் அம்மா பேசுவாங்க, அதன் பிறகு பொதுச்செயலாளர் ரூமுக்கு போனதும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனும் குரூப் போட்டோ எடுத்துக்குவாங்க என்று கூறிச் சென்றார்.

சசிகலா வருவதற்கு 15 நிமிடம் முன்பு தினகரன், வெங்கடேஷ், இருவரும் ஆஜராகினர். சசிகலா வந்ததும், சசிகலா பின்னால் இடதுபக்கமும், வலதுபக்கமும் தினகரன், வெங்கடேஷ் நின்று கொள்கிறார்கள், சசிகலா சிரித்த முகத்துடன் நீங்கள் அனைவரும் கட்டுகோப்புடன் உறுதியுடன் இருக்கவேண்டும், எதிர்கட்சியினர் சீர்குலைக்க நினைக்கிறார்கள் நாம் இடம்கொடுக்க கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற உழைக்கவேண்டும், அதற்கு தயாராக வேண்டும் என்று பேசியவுடன், பொதுச்செயலாளர் அறைக்குள் நுழைந்தார். பிறகு, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளை அழைத்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டு அனுப்பினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்