சினிமா
Now Reading
சதமடிக்கும் நிறுவனம் சறுக்காமல் காப்பாரா ஹீரோ?
0

சதமடிக்கும் நிறுவனம் சறுக்காமல் காப்பாரா ஹீரோ?

by Sub EditorFebruary 21, 2017 5:19 pm

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது தயாரிப்பாக வெளிவர இருக்கும் விஜய்யின் 61வது படத்தை அட்லி இயக்குகிறார்.
சமந்தா மற்றும் காஜல் அகர்வால் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விஜய் – அட்லி கூட்டணியில் வெளிவந்து வெற்றி பெற்ற தெறி படத்தில், விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அதேபோல், இந்த படத்திலும் அவர் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், படத்தின் சில காட்சிகள் 1980 காலகட்டத்தில் நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன. சமீபத்தில் விஜய் நடித்து வெளியான ‘பைரவா’ பெரிய அளவில் வெற்றி பெறாத வருத்தத்தில் நடிகர் விஜய் இருப்பதாலும், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக இது இருப்பதாலும், படத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. அதற்கு ஏற்றார்போல விறு விறு காட்சிகளும், வசனங்களும் இடம்பெறும் என்று தெரிகிறது. எல்லாம் சரி, மக்கள் ரசிக்கும்படி இருக்க வேண்டும். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

– ஜெயச்சந்திரன்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response