மாவட்டம்
Now Reading
சட்டப்படிதான் செயல்படுகிறேன் கிரண்பேடி மறுப்பு
0

சட்டப்படிதான் செயல்படுகிறேன் கிரண்பேடி மறுப்பு

by editor sigappunadaJanuary 8, 2017 12:32 pm

kiranbedi0

தூய்மை பணிக்காக பணியாற்றுவது ஆளுநரின் பொறுப்பு அதனை சட்டப் படிதான் செய்கிறேன் என்று புதுச்சேரி காங்கிரஸ் மற்றும் அதிமுகவிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பிரதமர் அறிவித் துள்ள ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை செயல்படுத்த வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச் சேரியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவ்வாறு செல்லும்போது பல இடங்களில் தொகுதி எம்எல்ஏக்களுக்கு தெரிவிப் பதில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் நிர்வகித்து வந்த ‘கிராம மேம்பாடு’ என்ற வாட்ஸ்-அப் குரூப்பில் உறுப்பினராக இருந்த கூட்டுறவு சங்க பதிவாளர் சிவக்குமார் ஆபாச படம் அனுப்பியதன் காரணமாக ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயண சாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இவ்விஷயத்தில் ஆளுநர் கிரண் பேடி, பதிவாளர் சிவக்குமாரை பணியிடை நீக்கம் செய்தார். இதை யடுத்து முதல்வர் நாராயணசாமி அதிகாரிகள் சமூக வலைதளங்களில் அரசு தகவல்களை அனுப்ப கூடாது என்று அமைச்சரவை கூட்டத்தை கூட்டி முடிவு எடுத்து தலைமை செயலர் மூலம் உத்தரவு பிறப் பித்தார்.

இந்த உத்தரவு செல்லாது என்று ஆளுநர் கிரண்பேடி மற்றொரு உத்தரவை பிறப்பித்தார்.

இதனைக் கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு உள்துறை அமைச்சருக்கும் புகார் மனு அனுப்பினர். அதுபோல் அதிமுக எம்எல்ஏ அன்பழகனும் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். இரு கட்சிகளும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோளும் விடுத் துள்ளனர்.

எம்எல்ஏக்கள் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியின்போது ஆளுநர் தொகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது தொகுதியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரிவிப் பதில்லை என்றும் குற்றம் சாட்டி யிருந்தனர்.

இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் எம்எல்ஏக்கள் அளித்த பேட்டி வந்த செய்தி புகைப்படத்தை வெளியிட்டு, அதில் தனது கருத்தையும் பதிவு செய் திருக்கிறார்.

அதில், ‘‘சுத்தமான புதுச்சேரியை உருவாக்குவது என்பது கடமை மட்டுமல்ல; சட்டத்தின்படி ஆளுநரின் உரிமையும் கூட. அதனை நான் நிறை வேற்றுவேன்.’’ என்றும் பதிவிட்டு காங்கிரஸ், அதிமுக குற்றச் சாட்டிற்கு பதில் அளித்துள்ளார்.

இதன்மூலம் புதுச்சேரி ஆளுநர் மற்றும் எம்எல்ஏக்களுக்கு இடையே யான மோதல் முற்றுவதாக பரவலாக பேசப்படுகிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response