மாவட்டம்
Now Reading
சசிகலா முதல்வர்- சர்ச்சையை கிளப்பும் அமைச்சர்கள்
0

சசிகலா முதல்வர்- சர்ச்சையை கிளப்பும் அமைச்சர்கள்

by editor sigappunadaJanuary 1, 2017 6:22 pm

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றார். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகம் வந்த சசிகலா பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார்.

இதற்கிடையே சசிகலா முதல்-அமைச்சர் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று அமைச்சர்களும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் வற்புறுத்தி வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் மொட்டையடித்துக் கொண்ட அமைச்சர் உதயகுமார் ‘‘அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் சசிகலா பொறுப்பு ஏற்க வேண்டும்’’ என்றார்.

இந்நிலையில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் இன்று புத்தாண்டு தினத்தில் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது 3 பேருமே அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றது போல ஆட்சிப் பொறுப்பையும் அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்