பேட்டி
Now Reading
சசிகலாவுடன் இணைய வாய்ப்பே இல்லை – ஜெ. தீபா
0

சசிகலாவுடன் இணைய வாய்ப்பே இல்லை – ஜெ. தீபா

by editor sigappunadaJanuary 7, 2017 8:21 pm

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொண்டர்களின் மனநிலை அறிந்து அதற்கேற்ப தனது அரசியல் பயணம் இருக்கும் என்று தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று மாலை அவரது வீட்டில் செய்தியாளரிடம் பேசுகையில், அம்மா அவர்களின் தியாகங்களுக்கு ஒப்பீடே செய்ய முடியாது. அவரது ஒப்பற்ற தியாகங்களும், அவருடைய பெயரையும், புகழையும் நாம் அனைவரும் நிலைநாட்ட வேண்டும். உரிய காலக்கட்டத்தில் நல்ல முடிவை நான் அறிவிப்பேன். நாளைய சமுதாய வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் மனதில் வைத்து எனது முடிவுகள் இருக்கும். மீண்டும் ஒருமுறை நம் ஒப்பற்ற தலைவி அம்மா அவர்களையும், இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களையும் வணங்குகிறேன். உங்களுக்காக நான் விரைவில் பணியாற்ற காத்திருக்கிறேன்.

எனக்காக ஆதரவு தெரிவித்து இங்கு வந்துள்ள அனைத்து தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா விட்டுச் சென்ற பணியை தொடர காத்திருக்கிறேன். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். புதிய பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன். மிக விரைவில் இது தொடர்பாக விவரங்களை வெளியிடுவேன். எனது வீட்டிற்கு அதிமுக தொண்டர்கள் திரண்டு வருவது ஆச்சரியமளிக்கிறது. தற்போதைய சூழலில் சசிகலாவுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஜெயலலிதா இருந்த இடத்தில் மற்றொருவரை வைத்து அழகு பார்க்க தொண்டர்கள் விரும்பவில்லை. அதன் காரணமாகவே எனது வீட்டை நோக்கித் தொண்டர்கள் வருகிறார்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும். எனது வீட்டிற்கு அருகே தொண்டர்களை திரள விடாமல் தடுப்பது, பேனர்களை அப்புறப்படுத்துவது தேவையற்ற செயல் என்று கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response