பேட்டி
Now Reading
சசிகலாவுக்கு வாழ்த்துக் கூறிய ராசாத்தியம்மாள்
0

சசிகலாவுக்கு வாழ்த்துக் கூறிய ராசாத்தியம்மாள்

by editor sigappunadaJanuary 1, 2017 3:22 pm

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதையடுத்து, அவருக்கு திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தியம்மாள் போனில் வாழ்த்து கூறினார்.

அதிமுக பொதுக்குழு அதிகாரப்பூர்வமாக சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்த பின்னர், அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா. அதையடுத்து, சசிகலாவுக்கு பலர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனும் நேற்று போயஸ் தோட்டத்திற்கு நேரில் சென்று சசிகலாவிற்கு வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதையடுத்து, அவருக்கு திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தியம்மாள் போனில் வாழ்த்து கூறினார். அப்போது ராசாத்தியம்மாளிடம், சசிகலா போனில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பதில் தெரிவிக்கையில், தங்களின் வாழ்த்தை திமுக தலைவர் கலைஞரின் வாழ்த்தாகவே நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response