அரசியல்
Now Reading
சசிகலாவுக்கு எதிரான சசிகலா புஷ்பாவின் மனு தள்ளுபடி
0

சசிகலாவுக்கு எதிரான சசிகலா புஷ்பாவின் மனு தள்ளுபடி

by editor sigappunadaJanuary 2, 2017 6:06 pm

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா புஷ்பா எம்பி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்க ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பம் கேட்டு ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரதிலகர், அதிமுகவினரால் கடுமையாக தாக்கப்பட்டார்.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா புஷ்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்து பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பாவுக்கு  இது தொடர்பாக கேள்வி எழுப்ப எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இதனால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், சசிகலா புஷ்பா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response