பேட்டி
Now Reading
கோமாளித்தனங்களை நிறுத்துங்கள்: ஸ்டாலினுக்கு தினகரன் கண்டிப்பு
0

கோமாளித்தனங்களை நிறுத்துங்கள்: ஸ்டாலினுக்கு தினகரன் கண்டிப்பு

by editor sigappunadaFebruary 26, 2017 11:10 am

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியை, வாழப்பாடி பழனிச்சாமி என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை காவிரி நடுவர் மன்றம் என்றும், அவ்வப்போது பொது இடங்களில் மு.க.ஸ்டாலின் கோமாளித்தனங்கள் புரிவதாக அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கண்டிப்புடன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 24.2.2017 அன்று பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, “கொலைக் குற்றவாளியான ஜெயலலிதா” என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி இருக்கிறார்.

இது போன்றறொரு அவதூறை, கடுகளவும் உண்மையற்ற பழிச்சொல்லை மு.க.ஸ்டாலின் பயன்படுத்தி விமர்சித்திருப்பது அவரது பண்பாடற்ற தன்மையையே காட்டுகிறது.

கோடானு கோடி மக்களின் இதயங்களில் வாழுகின்ற அம்மாவின் நினைவலைகளை, திட்டங்களுக்கு பெயர் சூட்டி தான் நிலைநிறுத்த வேண்டும் என்ற அவசியமோ, கட்டாயமோ இல்லை என்பதை உலகம் அறியும்.

கொலைக் குற்றவாளி என்கிற அடுக்காத அவதூறு பழிபோட்ட மு.க.ஸ்டாலின், தான் பயன்படுத்திய அப்பட்டமான அவதூறினை திரும்பப் பெற்று, தனது பண்பாடற்ற செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியை, வாழப்பாடி பழனிச்சாமி என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை காவிரி நடுவர் மன்றம் என்றும், அவ்வப்போது பொது இடங்களில் கோமாளித்தனங்கள் புரியும் மு.க.ஸ்டாலின் இனியும் துண்டுச் சீட்டு துணையின்றி பேசுவதை நிறுத்திக்கொள்வதே உத்தமம் என்றும் இவ்வேளையில் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response