சினிமா
Now Reading
கைகாசை செலவு செய்த வில்லன் நடிகர்!
0

கைகாசை செலவு செய்த வில்லன் நடிகர்!

by Sub EditorMarch 6, 2017 7:44 pm

இவர் இந்தப் படத்தில் ஹீரோவா, இல்லை கதாநாயகனா என்று கேட்கும் அளவுக்கு பெயர் வாங்கியிருந்தார் ‘போகன்’ படத்தில் நடிகர் அரவிந்தசாமி.
‘தனி ஒருவன்’ படத்தில் நடித்ததன் மூலம் அரவிந்தசாமி, ஜெயம் ரவி மற்றும் இயக்குநர் ராஜா இடையே நெருக்கமான நட்பு இருந்தது. அந்த நட்பில் தான், ‘போகன்’ படத்தில் ஜெயம் ரவி- அரவிந்தசாமி கூட்டணி மீண்டும் இணைந்தது. மூவர் கூட்டணியான ராஜா, ரவி, சாமி ஆகியோர் நட்பில் இப்போது விரிசல் ஏற்பட்டிருக்கிறது. அதுவும் ‘போகன்’ படத்தை வைத்து. படம் வெளிவந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது, இப்போது என்ன விரிசல் என்கிறீர்களா?
அந்தப் படத்திற்கு ஒப்பந்தம் போடும்போதே, ஜெயம் ரவி & அரவிந்தசாமி இணைந்து நடிக்கும் என்று போட வேண்டும என கண்டிஷன் போட்டாராம் அரவிந்தசாமி.
ஆனால், சில போஸ்டர்களில் மட்டும் பெயருக்கு போட்டுவிட்டு பெரும்பாலானவற்றில் அரவிந்தசாமி பெயர் போடவில்லையாம். இதனால் கடுப்பான அரவிந்தசாமி தனியாக ஒருலட்சம் ரூபாய் செலவு செய்து விளம்பரம் கொடுத்தாராம். அதனால்தான் விரிசலாம்.

– எஸ்.சுபத்ரா

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response