அரசியல்
Now Reading
கூட்டணிக்கட்சி தலைவர்கள் கூட்டம்: ஸ்டாலின்
0

கூட்டணிக்கட்சி தலைவர்கள் கூட்டம்: ஸ்டாலின்

by editor sigappunadaMarch 26, 2017 9:10 am

ஆர்.கே.நகரில் வரும் 28ஆம் தேதி தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது…

“சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜை மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் ஏற்கெனவே பலமுறை சொல்லி வலியுறுத்தி வந்திருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எங்களுடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் ஆணையரைச் சந்தித்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருக்கக்கூடிய ஜார்ஜ் அவர்களை மாற்றிட வேண்டும், அதேபோல ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றிட வேண்டும் என்று எடுத்து வைத்த கோரிக்கை நியாயமானது என்பதை தேர்தல் ஆணையம் உணர்ந்த காரணத்தினால்தான் இந்த மாற்றம் நடந்திருக்கிறது.

தேர்தல் பிரசாரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வரும் 28ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியில் இடம்பெற்று இருக்கக்கூடிய எல்லா கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கக்கூடிய வகையில், ஒரு கூட்டம் நடைபெற இருக்கிறது.

ஆர்.கே.நகரில் தொடர்ச்சியாக பணப்பட்டுவாடா நடக்கிறது என்ற குற்றச்சாட்டை மதுசூதனன் சொல்லி இருக்கிறார். தி.மு.க. சார்பாக இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். விரைவில் ஆதாரங்களோடு நாங்கள் இந்த செய்தியை மீண்டும் தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்துவோம்” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response